விமானப் படைக்கான ஹெலிகொப்டர் கொள்வனவிற்கு அமைச்சரவை அனுமதி 

விமானப் படைக்கான ஹெலிகொப்டர் கொள்வனவிற்கு அமைச்சரவை அனுமதி 

எழுத்தாளர் Staff Writer

09 Jul, 2020 | 11:15 am

Colombo (News 1st) இலங்கை விமானப்படைக்கு, பயன்படுத்தப்பட்ட 4 ஹெலிகொப்டர்களை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

இன்று (09) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை வௌியிடும் ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி, இலங்கை விமானப்படைக்கு பயன்படுத்தப்பட்ட 4 விமானங்களை கொள்வனவு செய்வதற்கான அமைச்சரவை பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார்.

மத்திய ஆபிரிக்க அரசின் பல வேலைத்திட்டங்களை விமானப்படை முன்னெடுக்கின்றமையால் அவர்களை பயிற்றுவிக்கும் வகையில் குறித்த விமானங்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இவ்வளவு காலமும் சுங்க கட்டளைச்சட்டத்தின் பிரகாரம் அரசுடைமையாக்கப்பட்ட வாகனங்கள் விசேட சுற்றரிக்கையின் பிரகாரம் மீண்டும் அரச நிறுவனங்களுக்கு வழங்க முடியுமாகவுள்ளதாக அவர் கூறினார்.

அதனடிப்படையில் இராணுவம் மற்றும் அரச நிறுவனங்களின் வேண்டுகோளுக்கிணங்க அவை பெற்றுக் கொடுக்கப்படும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரண இதன்போது தெரிவித்துள்ளார்.

 

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்