வவுனியாவில் நாயை சுட்டுக்கொன்ற கிராம உத்தியோகத்தர் பிணையில் விடுவிப்பு

by Staff Writer 09-07-2020 | 7:47 PM
Colombo (News 1st) வவுனியாவில் நாய் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய கிராம உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். வவுனியா - செட்டிக்குளம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை (02) மாலை நாய் ஒன்றின் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூட்டில் நாய் இறந்துள்ளதுடன், இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் கிராம உத்தியோகத்தர் நேற்று காலை செட்டிக்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கிராம உத்தியோகத்தர் பிணையில் விடுகிக்கப்பட்டுள்ளார். கிராம உத்தியோகத்தரின் வீட்டிற்குள் நுழைந்த, அயல் வீட்டவரின் நாய் மீதே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த நாய் தனது உரிமையாளரின் வீட்டில் வைத்து இறந்துள்ளது. இந்நிலையில், துப்பாக்கிப் பிரயோகத்தால் ஏற்பட்ட இரத்தக்கசிவே மரணத்திற்கான காரணம் என கால்நடை வைத்திய அதிகாரியின் மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.