வட்டி வீதத்தை மேலும் குறைக்க நடவடிக்கை

வட்டி வீதத்தை மேலும் குறைக்க நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

09 Jul, 2020 | 8:11 pm

Colombo (News 1st) மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன் வழங்கல் வசதி வீதத்தினையும் 100 அடிப்படைப் புள்ளிகளால் குறைப்பதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை நேற்று கூடியபோது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சந்தைக் கடன் வழங்கல் வீதங்களை மேலும் குறைப்பதனைத் தாண்டி அதன் மூலம் பொருளாதாரத்தின் உற்பத்தியாக்கத் துறைகளுக்கான கடன் வழங்கலை தீவிரமான முறையில் அதிகரிப்பதற்காக நிதியியல் முறைமையை ஊக்குவிப்பதனையும் நோக்கமாகக் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்