மின்சார கட்டணத்திற்கு 25 வீத நிவாரணம் 

மின்சார கட்டணத்திற்கு 25 வீத நிவாரணம் 

எழுத்தாளர் Staff Writer

09 Jul, 2020 | 1:34 pm

Colombo (News 1st) மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் மின்சார கட்டணங்களில் 25 வீதத்தை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அமைச்சரவையின் இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இது தொடர்பில் இன்று (09) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்தார்.

இந்த நிவாரணங்கள் குறையாது எனவும் 25 வீதம் விலைப்பட்டியல் குறையும் எனவும் மின் துண்டிக்கப்படாது எனவும் நிலுவைப் பணம் அறவிடப்படமாட்டாது எனவும் பந்துல குணவர்தன கூறினார்.

இதனால் எவ்வளவு நட்டம் ஏற்பட்டாலும் இலங்கை மின்சார சபை அதனை ஏற்றுக்கொள்ளும் என குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் அது தொடர்பில் தமது அதிகாரிகளுடன் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் எவ்வாறாயினும் எதிர்காலத்தில் விலைப்பட்டியல் குறையுமே தவிர அதிகரிக்காது என அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன விளக்கமளித்துள்ளார்.

 

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்