சிறைக் கைதிகள் 204 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

சிறைக் கைதிகள் 204 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

சிறைக் கைதிகள் 204 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

எழுத்தாளர் Staff Writer

09 Jul, 2020 | 2:01 pm

Colombo (News 1st) சிறைக் கைதிகள் 204 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

பொலன்னறுவை சிறைச்சாலையிலுள்ள 11 கைதிகளும் பல்லேகல சிறைச்சாலையிலுள்ள 7 கைதிகளும் நேற்றிரவு தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக இராணுவ ஊடகப் பேச்சாளர், பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சிறைச்சாலை அதிகாரிகள் 9 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 2,094 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்