ஐவரி கோஸ்ட் நாட்டின் பிரதமர் காலமானார்

ஐவரி கோஸ்ட் நாட்டின் பிரதமர் காலமானார்

ஐவரி கோஸ்ட் நாட்டின் பிரதமர் காலமானார்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

09 Jul, 2020 | 9:46 am

Colombo (News 1st) மேற்கு ஆபிரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டின் (Ivory Coast) பிரதமர் அமாடோ கோன் கோலிபலி (Amadou Gon Coulibaly) காலமானார்.

அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றிருந்த போது, திடீர் சுகயீனமுற்ற நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

61 வயதான அமாடோ கோலிபலியை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் களமிறக்குவதற்கு ஆளும் கட்சி தீர்மானித்திருந்தது.

இருதய நோயினால் கடந்த 2 மாதங்களாக பிரான்ஸில் சிகிச்சை பெற்று மீண்டும் நாடு திரும்பிய நிலையிலேயே அவர் மீண்டும் சுகயீனமுற்றிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்