சட்டவிரோதமாக நாட்டை வந்தடைந்த அகதி ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்

சட்டவிரோதமாக நாட்டை வந்தடைந்த அகதி ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்

சட்டவிரோதமாக நாட்டை வந்தடைந்த அகதி ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்

எழுத்தாளர் Staff Writer

09 Jul, 2020 | 5:35 pm

Colombo (News 1st) கடல் வழியாக சட்டவிரோதமாக நாட்டை வந்தடைந்த அகதி ஒருவர் காங்கேசன்துறை கடற்படைத் தளத்தில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றார்.

யாழ். வேலணை பகுதியை சேர்ந்த 38 வயதான ஒருவரே தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுவதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஆறுமுகன் கேதீஸ்வரன் குறிப்பிட்டார்.

இவருக்கு கடந்த 03 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட முதலாவது பரிசோதனையில் COVID-19 தொற்று ஏற்பட்டிருக்கவில்லை என ஆறுமுகன் கேதீஸ்வரன் தெரிவித்தார்.

குறித்த நபர் தொடர் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், இவருக்கு 8ஆவது மற்றும் 14 ஆவது நாளில் மீண்டும் PCR சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

இராமநாதபுரம் – தங்கச்சிமடத்திலிருந்து சட்டவிரோதமாக மீன்பிடிப் படகொன்றில் கடந்த 02 ஆம் திகதி குறித்த நபர் நாட்டை வந்தடைந்துள்ளார்.

இந்நிலையில், இவரை நாட்டிற்கு அனுப்ப முகவராக செயற்பட்டவர் தற்போது காய்ச்சலுக்கு உள்ளாகியுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் இராமேஸ்வரம் செய்தியாளர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்