19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை மாற்ற இடமளிக்கப் போவதில்லை: ஐ.தே.க தெரிவிப்பு 

19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை மாற்ற இடமளிக்கப் போவதில்லை: ஐ.தே.க தெரிவிப்பு 

எழுத்தாளர் Bella Dalima

08 Jul, 2020 | 8:42 pm

Colombo (News 1st) 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை மாற்றுவதற்கு இடமளிக்கப் போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

19 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் அவசியமில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் வஜிர அபேவர்தன குறிப்பிட்டார்.

ஒவ்வொருவரின் கனவு உலகிற்குள் நாங்கள் நுழைய முடியாது. அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை மக்கள் வழங்க மாட்டார்கள். 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் படி வெற்றி பெற்றாலும் வெற்றி, தோல்வியடைந்தாலும் வெற்றி தான். தோல்வியடைந்தாலும் ஆட்சியமைக்க முடியும் என்ற வகையில் தான் நாங்கள் அரசியலமைப்புத் திருத்தத்தை எழுதியுள்ளோம். அதனால் தான் 2015 ஜனவரி 8 ஆம் திகதி 40 பேருடன் ஆட்சியமைத்தோம்

என வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலமாக சிக்கலான ஜனநாயக ஆட்சி முறைமையை நாம் உருவாக்கியுள்ளோம். அந்த சிக்கலான ஜனநாயக முறைமை என்ன? பொருத்தமான, பொருத்தமற்ற அரசியல் கட்சிகளின் கருத்துக்களைப் பெற்று ஆட்சி செய்யும் முறைமை 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது

என அவர் மேலும் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்