பொலிஸார் வசமுள்ள போதைப்பொருட்கள் தொடர்பில் விசாரணை

பொலிஸார் வசமுள்ள போதைப்பொருட்கள் தொடர்பில் விசாரணை ஆரம்பம்

by Staff Writer 08-07-2020 | 8:03 AM
Colombo (News 1st) பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் களஞ்சியத்தில் காணப்படும் போதைப்பொருட்களின் தொகை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த நடவடிக்காக அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் உதவி பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தில் உள்ள அதிகாரிகள் சிலர் பொலிஸாரினால் கைப்பற்றப்படுகின்ற போதைப்பொருட்களை மீளவும் போதைப்பொருள் வியாபாரிகளிடம் வழங்குவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையினால், இந் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். இதேவேளை, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் 11 பேரும் இன்று (08) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மேலும் ஒருவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். இவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடவத்தை பொலிஸினால் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் ஏனையவர்களும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஏனைய செய்திகள்