உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து அமெரிக்கா விலகல்

உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து விலகுவதாக ட்ரம்ப் அறிவிப்பு

by Staff Writer 08-07-2020 | 7:49 AM
Colombo (News 1st) உலக சுகாதார ஸ்தாபனத்தில் இருந்து விலகும் உத்தியோகபூர்வ நடவடிக்கையை அமெரிக்கா ஆரம்பித்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனம் சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் செயற்படுவதாக குற்றஞ்சாட்டிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரட்ப், ஸ்தாபனத்தில் இருந்து விலகும் தமது தீர்மானத்தை கடந்த மே மாதத்தில் அறிவித்தார். இதற்கு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாடுகள் எதிர்ப்பு வௌியிட்டிருந்தாலும், ஸ்தாபனத்தில் இருந்து அமெரிக்கா விலகும் என்பதுடன் நிதியுதவியை நிறுத்துவதாகவும் அறிவித்திருந்தார். தமது நிலைப்பாடு தொடர்பில் ட்ரம்ப், அமெரிக்க காங்கிரசுக்கு அறிவித்துள்ளார். உலக சுகாதார ஸ்தாபனத்தில் இருந்து விலகும் இந் நடவடிக்கைக்கு சுமார் ஒரு வருடமாகும் என கூறப்படுகின்றது.