வௌிநாட்டிலிருந்து வருகை தந்த மேலும் இருவருக்கு கொரோனா

வௌிநாட்டிலிருந்து வருகை தந்த மேலும் இருவருக்கு கொரோனா

வௌிநாட்டிலிருந்து வருகை தந்த மேலும் இருவருக்கு கொரோனா

எழுத்தாளர் Staff Writer

08 Jul, 2020 | 4:32 pm

Colombo (News 1st) வௌிநாட்டிலிருந்து வருகை தந்த மேலும் இருவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் மற்றும் பிலிப்பைன்ஸில் இருந்து நாடு திரும்பிய இருவருக்கே இன்று COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,084 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, COVID-19 தொற்றுக்குள்ளானவர்களில் 26 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.

நாட்டில் 1,967 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

COVID-19 தொற்றுக்குள்ளானவர்களில் 106 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்