பிரேஸில் ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி

பிரேஸில் ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி

பிரேஸில் ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

08 Jul, 2020 | 7:34 am

Colombo (News 1st) பிரேஸில் ஜனாதிபதி ஜெய்ர் பொல்சொனாரோவுக்கு (Jair Bolsonaro) கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

​கொரோனா அறிகுறிகளுடன் நான்காவது தடவையாக பரிசோதனைக்கு முகங்கொடுத்த அவருக்கு நேற்று (07) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் பொருளாதார பாதிப்பை தவிர்க்கும் வகையில் முடக்கலை தளர்த்துமாறு பிராந்திய ஆளுநர்களை அவர் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா தொற்று பட்டியலில் இரண்டாவது இடத்திலுள்ள பிரேஸிலில் இதுவரை 16,68,589 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இதுவரை 66,741 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்ச கொரோனா மரணங்கள் பிரேஸிலிலேயே பதிவாகியுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்