கைதிகளைப் பார்வையிட தற்காலிகத் தடை

கைதிகளைப் பார்வையிட தற்காலிகத் தடை

கைதிகளைப் பார்வையிட தற்காலிகத் தடை

எழுத்தாளர் Staff Writer

08 Jul, 2020 | 4:15 pm

Colombo (News 1st) அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள கைதிகளைப் பார்வையிட தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையில் கொரோனா நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய குறிப்பிட்டார்.

இதேவேளை, வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள 315 கைதிகளுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்த பரிசோதனைகளின் பெறுபேறுகள் இதுவரை கிடைக்கவில்லை எனவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

இதனிடையே, வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்த 189 கைதிகள், புனானை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சிறை அதிகாரிகள் 09 பேர் இராஜகிரியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்