இலஞ்ச ஊழல் வழக்கு: விமல் வீரவன்சவிற்கு எதிரான விசாரணை ஒத்திவைப்பு

இலஞ்ச ஊழல் வழக்கு: விமல் வீரவன்சவிற்கு எதிரான விசாரணை ஒத்திவைப்பு

இலஞ்ச ஊழல் வழக்கு: விமல் வீரவன்சவிற்கு எதிரான விசாரணை ஒத்திவைப்பு

எழுத்தாளர் Staff Writer

08 Jul, 2020 | 7:58 pm

Colombo (News 1st) அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் சாட்சி விசாரணையை நவம்பர் 26 ஆம் திகதி ஆரம்பிப்பதாக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டிஆரச்சி அறிவித்துள்ளார்.

அமைச்சராக செயற்பட்ட ஐந்து வருட காலப்பகுதியில் தமது சம்பளம் மற்றும் வருமானத்தினால் ஈட்ட முடியாத சுமார் 75 பில்லியன் ரூபா பணம் மற்றும் சொத்துக்களின் உரிமம் விமல் வீரவன்ச வசம் இருப்பதன் குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு எதிராக ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்கு விசாரணையை எதிர்வரும் செப்டம்பர் 7 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு நீதிமன்றத்தினால் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும், தமக்குள்ள வேலைப் பளுவினால் அந்தத் தினத்தில் ஆஜராக முடியாது என அவர் அறிவித்துள்ளார்.

இதனைக் கருத்திற்கொண்ட நீதிபதி சாட்சி விசாரணையை ஒத்திவைப்பதற்கு தீர்மானித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்