இலஞ்சம் பெற்ற அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை உத்தியோகத்தர் கைது

இலஞ்சம் பெற்ற அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை உத்தியோகத்தர் கைது

இலஞ்சம் பெற்ற அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை உத்தியோகத்தர் கைது

எழுத்தாளர் Staff Writer

08 Jul, 2020 | 3:36 pm

Colombo (News 1st) இலஞ்சம் பெற்றமை தொடர்பில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சுகாதார நிர்வாகப் பிரிவு மேற்பார்வை உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பணியாளர் ஒருவருக்கான கடமைகளை அவர் விரும்பிய பிரிவிற்கு மாற்றி வழங்குவதற்காக சுகாதார நிர்வாகப் பிரிவு மேற்பார்வை உத்தியோகத்தரால் 15,000 ரூபா இலஞ்சம் கோரப்பட்டுள்ளது.

இலஞ்சப் பணத்தில் 10,000 ரூபாவை இன்று பெற்றுக்கொண்ட போது அவர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

சந்தேகநபரை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் ஆஜர்படுத்திய போது, அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் 21 ஆம் திகதி வரை சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்