பளை வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழப்பு

இயக்கச்சி வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழப்பு 

by Staff Writer 08-07-2020 | 8:47 AM
Colombo (News 1st) பளை - இயக்கச்சி பகுதியில் வெடிபொருள் வெடித்ததில் காயமடைந்த நிலையில் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நபர் உயிரிழந்துள்ளார். கடந்த 3ஆம் திகதி வீட்டில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த புனர்வாழ்வளிக்கப்பட்ட 45 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இயக்கச்சி பகுதியில் இடம்பெற்ற வெடிச் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக அரச இரசாயன பகுப்பாய்வாளர் நேற்று முன்தினம் சம்பவ இடத்தில் சோதனைகளை மேற்கொண்டார். அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் மனைவி நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பெண் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இயக்கச்சி பகுதியில் இடம்பெற்ற வெடிச் சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் நேற்று கைது செய்யப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.  

ஏனைய செய்திகள்