அரசாங்கத்திற்கு சார்பாக ஐக்கிய தேசியக் கட்சி செயற்படுகிறது: மனுஷ நாணயக்கார குற்றச்சாட்டு

அரசாங்கத்திற்கு சார்பாக ஐக்கிய தேசியக் கட்சி செயற்படுகிறது: மனுஷ நாணயக்கார குற்றச்சாட்டு

எழுத்தாளர் Bella Dalima

08 Jul, 2020 | 8:55 pm

Colombo (News 1st) அரசாங்கத்திற்கு சார்பாக ஐக்கிய தேசியக் கட்சி செயற்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் மனுஷ நாணயக்கார குற்றம் சாட்டினார்.

பொதுஜன பெரமுனவிலுள்ளவர்கள் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது, அவர்கள் மேற்கொண்ட திருட்டுக்கள் தௌிவாகப் புலப்படுகின்றது. திருடர்களைப் பாதுகாப்பது யார்? இந்த அரசாங்கத்திற்காக செயற்படுவது யார்? இந்த அரசாங்கத்துடன் ஒப்பந்தமுள்ளது யாருக்கு? அரசாங்கத்தை பாதுகாக்க முற்படுகின்றனரே தவிர, அரசாங்கமொன்றை அமைக்க அவசரப்படவில்லை. இந்த அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கூறுவது யார் என்பதை முழு நாடும் தற்போது அறியும்

என மனுஷ நாணயக்கார கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்