அமெரிக்காவில் நாளொன்றில் பதிவாகிய அதிகூடிய எண்ணிக்கை: 60,000 பேருக்கு கொரோனா தொற்று

அமெரிக்காவில் நாளொன்றில் பதிவாகிய அதிகூடிய எண்ணிக்கை: 60,000 பேருக்கு கொரோனா தொற்று

அமெரிக்காவில் நாளொன்றில் பதிவாகிய அதிகூடிய எண்ணிக்கை: 60,000 பேருக்கு கொரோனா தொற்று

எழுத்தாளர் Bella Dalima

08 Jul, 2020 | 7:39 pm

Colombo (News 1st) அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலங்களில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 60 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர், இம்மாதம் 2 ஆம் திகதி பதிவாகிய 55,220 தொற்றாளர்களே நாளொன்றில் பதிவாகிய அதிகூடிய எண்ணிக்கையாகக் காணப்பட்டது.

கலிபோர்னியா மற்றும் டெக்ஸாஸ் மாநிலங்களில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு கடந்த 24 மணித்தியாலங்களில் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலேயே இந்த எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், மிக அதிகமான தொற்றாளர்கள் மற்றும் கொரோனா மரணங்களுடன் அமெரிக்கா முதலாவதாக பட்டியலிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கொரோனா தொற்று ஆரம்பித்ததிலிருந்து இதுவரை மூன்று மில்லியனுக்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், 1,31,000-இற்கும் அதிகமான கொரோனா மரணங்களும் அங்கு பதிவாகியுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்