விலங்குகளிடமிருந்து பரவும் நோய்கள் அதிகரிப்பு – ஐ.நா எச்சரிக்கை

விலங்குகளிடமிருந்து பரவும் நோய்கள் அதிகரிப்பு – ஐ.நா எச்சரிக்கை

விலங்குகளிடமிருந்து பரவும் நோய்கள் அதிகரிப்பு – ஐ.நா எச்சரிக்கை

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

07 Jul, 2020 | 8:37 am

Colombo (News 1st) விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்கள் தொடர்ச்சியாக அதிகரித்துவருவதாக ஐ.நா. நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

காட்டு விலங்குகளையும் அவற்றின் வாழ்விடங்களையும் பாதுகாக்காதவிடத்து இந்நிலை தொடர்ந்து கொண்டே செல்லுமெனவும் அவர்கள் அச்சம் வௌியிட்டுள்ளனர்.

விலங்கு புரதத்திற்கான அதிகரித்த கேள்வி, சமநிலையற்ற விவசாய நடவடிக்கைகள் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியன COVID – 19 உள்ளிட்ட நோய்கள் அதிகரிப்பதற்கான காரணமென அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்கள் தொடர்பான எச்சரிக்கை மிக குறைவாகவே இருக்கின்ற போதிலும், அதனால் வருடாந்தம் 2 மில்லியன் மக்கள் உயிரிழப்பதாக ஐ.நா. நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இபோலா(Ebola), West Nile virus மற்றும் சார்ஸ் (Sars) ஆகியனவும் விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவிய நோய்களாகும்.

தற்போது பரவிவரும் COVID – 19 தொற்றினால் உலகப் பொருளாதாரத்திற்கு 9 ட்ரில்லியன் டொலர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்