பிலியந்தலையில் ஹோட்டல் உரிமையாளர் கொலை

பிலியந்தலையில் ஹோட்டல் உரிமையாளர் கொலை

by Staff Writer 07-07-2020 | 4:33 PM
Colombo (News 1st) பிலியந்தலை - கெஸ்பேவ பகுதியில் ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கெஸ்பேவ பகுதியை சேர்ந்த 50 வயதான ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார். தலையின் பின்புறத்தில் காயத்துடன் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். இதேவேளை, கொலை செய்யப்பட்டவரின் மனைவி காயங்களுடன் மீட்கப்பட்டு களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. பிலியந்தலை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏனைய செய்திகள்