பிரித்தானியாவிற்கு சீனா எச்சரிக்கை விடுப்பு

பிரித்தானியாவிற்கு சீனா எச்சரிக்கை விடுப்பு

பிரித்தானியாவிற்கு சீனா எச்சரிக்கை விடுப்பு

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

07 Jul, 2020 | 11:46 am

Colombo (News 1st) ஹொங்கொங் விவகாரத்தில் தலையிட வேண்டாம் என பிரித்தானியாவிற்கு சீனா எச்சரித்துள்ளது.

3 மில்லியன் ஹொங்கொங் பிரஜைகளுக்கு தமது நாட்டு குடியுரிமை வழங்குவதாக பிரித்தானியா அறிவித்தமையானது பாரிய தலையீடு என சீனத் தூதுவர் Liu Xiaoming குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டை பிரித்தானிய வௌிவிவகார அமைச்சர் டொமினிக் ராப் நிராகரித்துள்ளார்.

சீனாவினால் புதிய தேசிய பாதுகாப்பு சட்டம் அமுல்படுத்தப்பட்டதை அடுத்து, ஹொங்கொங் பிரஜைகளுக்கு குடியுரிமை வழங்கும் சலுகையை பிரித்தானியா அறிவித்திருந்தது.

ஹொங்கொங்கின் ஆட்சியதிகாரத்தை மீள கையளிக்கும் போது, ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்படிக்கையை சீனா மீறியுள்ளதாக தெரிவித்து இந்த சலுகை வழங்கப்பட்டது.

இதேவேளை, குறித்த பாதுகாப்பு சட்டம், ஹொங்கொங்கின் சுதந்திரத்தைப் பாதிப்புக்குள்ளாக்குவதாக பிரித்தானியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் குற்றஞ்சாட்டியிருந்தன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்