சாதனை படைத்த சுஷாந்த் சிங்கின் தில் பேச்சாரா பட டிரெய்லர்

சாதனை படைத்த சுஷாந்த் சிங்கின் தில் பேச்சாரா பட டிரெய்லர்

சாதனை படைத்த சுஷாந்த் சிங்கின் தில் பேச்சாரா பட டிரெய்லர்

எழுத்தாளர் Bella Dalima

07 Jul, 2020 | 5:12 pm

சுஷாந்த் சிங் நடித்த (தில் பேச்சாரா) Dil Bechara படத்தின் டிரெய்லர் வௌியாகி, சாதனை படைத்துள்ளது.

Johnny Green எழுதிய The Fault in Our Stars என்கிற நாவலை மையமாகக் கொண்டு தில் பேச்சாரா என்கிற ஹிந்திப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

முகேஷ் சோப்ரா இயக்கியுள்ள இந்தப் படத்தில் சுஷாந்த் சிங், சஞ்சனா சங்கி போன்றோர் நடித்துள்ளார்கள். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

தில் பேச்சாரா, ஜூலை 24 ஆம் திகதி Hotstar தளத்தில் நேரடியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுஷாந்த் சிங்கிற்காக இந்தப் படம் அனைவரும் பார்க்கும் விதத்தில் இலவசமாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் டிரெய்லர் நேற்று (06) வெளியானது.

இந்நிலையில், யூடியூப் தளத்தில் வெளியான டிரெய்லர்களில் உலகளவில் அதிகம் பேர் விரும்பிய டிரெய்லராக தில் பேச்சாரா சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு யூடியூபில் வெளியான அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார் படத்தின் டிரெய்லருக்கு 36 இலட்சம் பேர் லைக் செய்து ஆதரவளித்துள்ளார்கள்.

ஆனால், கடந்த 24 மணி நேரத்தில் தில் பேச்சாரா பட டிரெய்லருக்கு 2.94 கோடி பார்வைகள் கிடைத்துள்ளன. 60 இலட்சம் பேர் லைக் செய்து ஆதரவளித்துள்ளார்கள்.

இதன்மூலம் யூடியூப் தளத்தில் புதிய சாதனை படைத்துள்ளது தில் பேச்சாரா பட டிரெய்லர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்