கட்டாரில் கொலையுண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலங்கள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன

கட்டாரில் கொலையுண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலங்கள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன

எழுத்தாளர் Staff Writer

07 Jul, 2020 | 8:32 pm

Colombo (News 1st) கட்டாரில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகள் ஆகிய மூவரின் சடலங்களும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இன்று கொண்டுவரப்பட்டன.

குறித்த மூவரும் கழுத்து நெறித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் மங்கள ரன்தெனிய தெரிவித்தார்.

59 வயதான தந்தையும், 55 வயதான தாயும், 34 வயதான மகளுமே உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் மூவரும் கடந்த மார்ச் மாதம் வீட்டினுள் வைத்துக் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் இதுவரை கைது செய்யப்படவில்லை.

கொரோனா தொற்றுப் பரவலை அடுத்து, விமானப் போக்குவரத்து இடம்பெறாததன் காரணமாக உடனடியாக சடலங்களை இங்கு கொண்டுவர முடியாது போனதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் கூறினார்.

பிரேதப் பரிசோதனைகளுக்காக சடலங்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்த மூவரும் களனியைச் சேர்ந்தவர்களாவர்.

கட்டார் தூதரகத்தின் தூதுவர் பிரிவு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் மங்கள ரன்தெனிய குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்