ஜப்பானில் பெய்துவரும் மழையினால் பாரிய சேதம்

ஜப்பானில் பெய்துவரும் மழையினால் பாரிய சேதம்

by Chandrasekaram Chandravadani 06-07-2020 | 7:29 PM
Colombo (News 1st) பலத்த மழை மற்றும் வௌ்ளத்தினால் ஜப்பான் பாரிய நெருக்கடியை சந்தித்துள்ளது. கடந்த வார இறுதியில் ஏற்பட்ட வௌ்ளத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது. 40,000 இற்கும் அதிகமான மீட்புப் பணியாளர்கள், வௌ்ளத்தில் சிக்கியிருப்பவர்களைக் காப்பாற்றுவதற்கான தேடுதல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பலத்த மழையை அடுத்து மண்சரிவுகள் ஏற்பட்டதுடன், ஆறுகள் பெருக்கெடுத்துப் பாய்வதனால் பலர் வெள்ளத்திற்குள் சிக்கிக் கொண்டுள்ளனர். வௌ்ளத்தில் சிக்கித் தவித்த 800 பேர் மீட்கப்பட்டுள்ளதுடன், காணாமற்போன 13 பேர் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லையென ஜப்பானிய அமைச்சரவை செயலாளர் தெரிவித்துள்ளார். அடுத்த 2 நாட்களில் மேலும் 30 சென்ரிமீற்றர் மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் மேலும் பல அழிவுகள் ஏற்படக்கூடுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.