டொமினிக்கன் குடியரசின் ஜனாதிபதி தேர்தல் இன்று

டொமினிக்கன் குடியரசின் ஜனாதிபதி தேர்தல் இன்று

by Chandrasekaram Chandravadani 05-07-2020 | 10:51 AM
Colombo (News 1st) ​டொமினிக்கன் குடியரசில் இன்று (05) ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ளது. கடந்த மே மாதம் நடைபெறவிருந்த இந்தத் தேர்தல் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிற்போடப்பட்டிருந்தது. எதிர்க்கட்சியான நவீன சீர்திருத்தக் கட்சியின் வேட்பாளர் லூயிஸ் அபிநாதர், முதற்சுற்றில் அதிகளவான வாக்குகளைப் பெறுவாரென கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. இதேவேளை, சட்டவாக்க சபைக்கான 190 பிரதி உறுப்பினர்களையும் 32 செனட்டர்களையும் டொமினிக்கன் குடியரசு மக்கள் இன்று தெரிவுசெய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.