வௌ்ளவத்தையில் உள்ள வர்த்தக நிலையங்கள் சிலவற்றில் தீ

வௌ்ளவத்தையில் உள்ள வர்த்தக நிலையங்கள் சிலவற்றில் தீ

வௌ்ளவத்தையில் உள்ள வர்த்தக நிலையங்கள் சிலவற்றில் தீ

எழுத்தாளர் Staff Writer

05 Jul, 2020 | 12:43 pm

Colombo (News 1st) வௌ்ளவத்தையிலுள்ள வர்த்தக நிலைய தொடரொன்றில் தீ பரவியுள்ளது.

தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக 5 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போது தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அங்கிருக்கும் நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் கூறினார்.

இதனையடுத்து, தெஹிவளையில் இருந்து கொழும்புக்குள் பிரவேசிக்கும் காலி வீதி, இராமகிருஷ்ணா சந்தியில் இருந்து டபிள்யூ.ஏ. சில்வா மாவத்தை சந்தி வரை மூடப்பட்டுள்ளது.

கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்களை சமுத்ராசன்ன மாவத்தையூடாக பயணிக்குமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தீ விபத்து காரணமாக காலி வீதியில் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்