சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை

சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை

சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை

எழுத்தாளர் Fazlullah Mubarak

05 Jul, 2020 | 3:36 pm

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் சற்று முன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இந்தப் பிணை வழங்கப்பட்டுள்ளது.

வழக்கொன்றின் பிடியாணைக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்திருந்தார்.

யாழ். வெல்வெட்டித்துறையிலுள்ள வீட்டில் இருந்தபோது அவரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதனையடுத்து பிணை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்