குசல் மென்டிஸின் வாகனம் மோதி ஒருவர் உயிரிழப்பு 

குசல் மென்டிஸின் வாகனம் மோதி ஒருவர் உயிரிழப்பு 

குசல் மென்டிஸின் வாகனம் மோதி ஒருவர் உயிரிழப்பு 

எழுத்தாளர் Staff Writer

05 Jul, 2020 | 9:42 am

Colombo (News 1st) இலங்கை கிரிக்கெட் வீரர் குசல் மென்டிஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

குசல் மென்டிஸின் ஜீப் வண்டியில் மோதி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, இன்று (05) அதிகாலை அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஹொரேதுடுவ பகுதியில் ஜீப் வண்டியும் சைக்கிளொன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

பாணந்துறை – கொரகபொல பகுதியைச் சேர்ந்த 64 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பாணந்துறை வடக்கு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்