38 சிறு மின் உற்பத்தி நிலையங்களுடன் ஒப்பந்தம்

38 சிறு மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரம் பெற்றுக்கொள்ள ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது

by Staff Writer 04-07-2020 | 4:39 PM
Colombo (News 1st) 38 சிறு மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து தேசிய மின் கட்டமைப்பிற்கு மின்சாரத்தைப் பெற்றுக்கொள்வது தொடர்பிலான ஒப்பந்தம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (07) கைச்சாத்திடப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்தது. சிறிய மின்னுற்பத்தி நிலையங்களில் இருந்து 75 மெகாவாட் மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை மின்சார சபையின் தலைவர் விஜித்த ஹேரத் தெரிவித்தார். மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி வளத்தை மேம்படுத்தி மின்சார சபையில் இலாபத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது. இதனூடாக தேசிய உற்பத்தியாளர்களுக்கு சிறந்த வாய்ப்புகள் உருவாகுவதுடன், சிறு மின் உற்பத்தி நிலையங்களினூடாக மின் கட்டமைப்பிற்கு மேலதிக மின்சாரத்தை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டார்.