by Staff Writer 04-07-2020 | 6:17 PM
Colombo (News 1st) புத்தளம் - முந்தல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பூசணிச் செய்கையில் வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளதால், தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்கையாளர்கள் தெரிவித்தனர்.
முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல பகுதிகளில் பூசணி அதிகளவில் செய்கை பண்ணப்படுகின்றது.
பூசணிச் செடியில் தற்போது பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
வங்கிகளில் கடனைப் பெற்று மேற்கொண்ட தமது செய்கை அழிவடைந்து வருவதால், விவசாயிகளின் வருமானம் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.