கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்களில் இருந்து விலகுவது கடினம் என பிரதமர் தெரிவிப்பு

by Staff Writer 04-07-2020 | 8:25 PM
Colombo (News 1st) உடன்படிக்கைகளில் விரைவாகக் கைச்சாத்திட முடியும் என்ற போதிலும், அதிலிருந்து வௌியேறுவது சிரமமானது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.
கடந்த காலத்தில் துறைமுகத்தை விற்கும்போது அமைச்சர்கள் துள்ளிக்குதித்து வாக்களித்தனர். அது விற்கப்பட்டதால் யாருக்கு நட்டமேற்பட்டது? இந்த நாட்டிற்கே நட்டம் ஏற்பட்டது. விமான நிலையத்தை விற்பதற்கு முயற்சித்தனர். உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்
என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார். நாடொன்றுடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டால், அதில் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது என்பது பாரிய பிரச்சினையாகும். தம்மால் முடியாது என அவர்கள் கூறுவார்களாயின், அந்த உடன்படிக்கையைத் தொடர நேரிடும். அவ்வாறில்லாவிட்டால், அந்நாட்டுடன் முரண்பட வேண்டியேற்படும் என பிரதமர் சுட்டிக்காட்டினார். மேலும், MCC உடன்படிக்கையை ஏன் தடை செய்யவில்லை என பலரும் தம்மிடம் கேட்பதாகக் கூறிய பிரதமர், அதனை நீக்குவதற்கு முன்னர் அது என்ன என்பதை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார். வீரகெட்டியவில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இவ்விடயங்களைக் குறிப்பிட்டார்.