by Staff Writer 04-07-2020 | 3:23 PM
Colombo (News 1st) 2011 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஆட்ட நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் இடம்பெற்ற விசாரணைகளை நிறுத்தியமை தவறானது என முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், விளையாட்டுக் குற்றங்களைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவின் அறிக்கை பதில் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை பெற்றுக்கொள்ளப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் ஆட்ட நிர்ணம் இடம்பெற்றமைக்கான ஆதாரங்கள் இல்லையென நேற்று அறிவிக்கப்பட்டது.
இதனிடையே, 2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றமைக்கான எந்த சாட்சிகளும் கிடைக்கவில்லை என சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் மோசடி ஒழிப்புப் பிரிவின் பொது முகாமையாளரான அலெக்ஸ் மார்ஷல் அறிக்கை ஒன்றினூடாக அறிவித்துள்ளார்.