தனிமைப்படுத்தலை நிறைவு செய்த பலர் வீடு திரும்பினர்

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த பலர் வீடு திரும்பினர்

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த பலர் வீடு திரும்பினர்

எழுத்தாளர் Staff Writer

04 Jul, 2020 | 3:43 pm

Colombo (News 1st) தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் பலர் இன்று வீடு திரும்பியுள்ளனர்.

வவுனியா – வேலங்குளம் விமானப்படை தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த 152 பேர் இன்று வீடு திரும்பியுள்ளனர்.

துபாய் மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து நாட்டிற்கு வருகை தந்தவர்கள் வேலங்குளம் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

கண்டி, மாத்தறை, நுவரெலியா, கம்பஹா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 152 பேர் வேலங்குளம் விமானப்படை தனிமைப்படுத்தல் முகாமில் தங்கியிருந்தனர்.

14 நாட்கள் தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த பின்னர் கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.

50 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 6,855 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுவதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதுவரை 17,859 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடு திரும்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்