சட்ட மாஅதிபரின் நிகழ்வை பதிவு செய்ய அனுமதி மறுப்பு

சட்ட மா அதிபர் - போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் சந்திப்பு; ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

by Staff Writer 03-07-2020 | 10:22 PM
Colombo (News 1st) பொலிஸ் மற்றும் சிறைச்சாலை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருக்கு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா இன்று அழைப்பு விடுத்திருந்தார். கொழும்பு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரை சட்ட மா அதிபர் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை ஔிப்பதிவு செய்வதற்கு ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், பொலிஸார் அதற்கு இடமளிக்கவில்லை. சட்ட மா அதிபர் அங்கு வருகை தந்த பின்னர், ஊடகவியலாளர் ஒருவர் உட்பிரவேசித்த போதிலும், பொலிஸாரின் தலையீட்டில் அவர் அங்கிருந்து வௌியேற்றப்பட்டார். எவ்வாறாயினும், சட்ட மா அதிபரின் உரையை இன்று மாலை சட்ட மா அதிபர் திணைக்களம் ஊடகங்களுக்கு வௌியிட்டது.