மண்டைத்தீவில் 400 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது

மண்டைத்தீவில் 400 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது

மண்டைத்தீவில் 400 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது

எழுத்தாளர் Staff Writer

03 Jul, 2020 | 4:08 pm

Colombo (News 1st) யாழ்ப்பாணம் – மண்டைத்தீவு கடற்பிராந்தியத்தில் 400 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

சுமார் 60 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சாவே கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

கேரள கஞ்சாவை கொண்டுவந்தவர்களை தேடி சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் லெப்டினன்ட் கமாண்டர் இசுரு சூரியபண்டார தெரிவித்தார்.

கடற்படையினரால் இன்று அதிகாலை முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக அவர் கூறினார்.

இந்த வருடத்தின் கடந்த 6 மாதங்களில் மாத்திரம் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில், 3,300 கிலோகிராமிற்கும் மேற்பட்ட தொகை கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் லெப்டினன்ட் கமாண்டர் இசுரு சூரியபண்டார சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்