கொக்கைனுடன் கைதான நைஜீரியப் பிரஜைக்கு மரண தண்டனை

கொக்கைனுடன் கைதான நைஜீரியப் பிரஜைக்கு மரண தண்டனை

கொக்கைனுடன் கைதான நைஜீரியப் பிரஜைக்கு மரண தண்டனை

எழுத்தாளர் Staff Writer

03 Jul, 2020 | 3:52 pm

Colombo (News 1st) கொக்கைன் போதைப்பொருளை வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை ஆகிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நைஜீரியப் பிரஜைக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டது.

774 கிராம் கொக்கைன் போதைப்பொருளை வைத்திருந்தமை, அதனை விற்பனை செய்தமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளும் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமானதால், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெத்திகே குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்துள்ளார்.

2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 04 ஆம் திகதி இரத்மலானை பகுதியில் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தால் குறித்த நைஜீரிய பிரஜை கைது செய்யப்பட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்