கண்காணிப்பு நிலையங்களில் மேலும் 4 மலேரியா நோயாளர்கள்

கண்காணிப்பு நிலையங்களில் மேலும் 4 மலேரியா நோயாளர்கள்

கண்காணிப்பு நிலையங்களில் மேலும் 4 மலேரியா நோயாளர்கள்

எழுத்தாளர் Staff Writer

03 Jul, 2020 | 7:05 pm

Colombo (News 1st) நாட்டிலுள்ள தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களில் மேலும் 4 மலேரியா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களில் இருந்து இதுவரை 8 மலேரியா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய மலேரியா ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் பிரசாத் ரணவீர குறிப்பிட்டார்.

இவர்கள் அனைவரும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வந்தவர்கள் எனவும் அவர் கூறினார்.

கம்பஹா மற்றும் மாத்தளை பகுதிகளிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களிலேயே மலேரியா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் நிலையங்களில் அடையாளம் காணப்பட்டுள்ள நோயாளர்கள் ஒரு வருடத்திற்கு தொடர் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படுவார்கள் என தேசிய மலேரியா ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் பிரசாத் ரணவீர தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்