MCC: அடுத்த வாரம் அமைச்சரவைத் தீர்மானத்தை அறிவிப்போம் - பந்துல குணவர்தன

by Staff Writer 02-07-2020 | 7:59 PM
Colombo (News 1st) MCC மீளாய்வுக் குழு அறிக்கை அமைச்சர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது, இது தொடர்பான பரிந்துரைகளை முன்வைக்குமாறு அமைச்சர்களுக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளதாக, இணை அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சர்களின் பரிந்துரைகளைப் பெற்று அடுத்த வாரமளவில் கலந்துரையாட முடியும் என பந்துல குணவர்தன கூறினார். நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தி, அரசியலமைப்பிற்கு முரணான, நாட்டின் சட்ட கட்டமைப்பிற்கு முரணான எந்தவொரு உடன்படிக்கையையும் எந்தவொரு அரசாங்கத்துடனும் கைச்சாத்திடப் போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெளிவாகக் கூறியுள்ளதாக பந்துல குணவர்தன சுட்டிக்காட்டினார்.
அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகளுடன் பொதுவான சர்வதேச கொள்கைகளே காணப்படுகின்றன. அதனால் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கம் என்ற ரீதியில், ஆரம்ப கட்டத்தில் இருக்கின்ற இந்த உடன்படிக்கையை கிழித்தெறிவோம். குப்பைக்கூடையில் வீசுவோம். இவை சில்லறைப் பேச்சுக்கள். நாடு அதனை விடவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அடுத்த வாரம் அறிக்கைகள் கிடைத்தவுடன், MCC உடன்படிக்கை தொடர்பான அமைச்சரவைத் தீர்மானத்தை நாம் அறிவிப்போம்
என அவர் குறிப்பிட்டார்.