75 கள்ள வாக்குகள் அளித்ததாகக் கூறிய சிறிதரனுக்கு எதிராக முறைப்பாடு

75 கள்ள வாக்குகள் அளித்ததாகக் கூறிய சிறிதரனுக்கு எதிராக முறைப்பாடு

75 கள்ள வாக்குகள் அளித்ததாகக் கூறிய சிறிதரனுக்கு எதிராக முறைப்பாடு

எழுத்தாளர் Staff Writer

02 Jul, 2020 | 4:21 pm

Colombo (News 1st) 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் 75 கள்ள வாக்குகள் அளித்ததாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தமைக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தரணி செலஸ்டீன் ஸ்ரனிஸ்லாஸினால் யாழ்ப்பாணத்தில் நேற்று (01) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற நேர்காணலின் போது 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 75 கள்ள வாக்குகள் அளித்ததாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் குறிப்பிட்டிருந்தார்.

இந்த விடயம் தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட வேட்பாளரும் சட்டத்தரணியுமான செலஸ்டீன் ஸ்ரனிஸ்லாஸ் முறைப்பாடு செய்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல் முறைப்பாட்டு அலுவலகத்தில் நேற்று பிற்பகல் வேளையில் அவரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்