பிரசாரங்களுக்கு நிழற்படத்தை பயன்படுத்த வேண்டாம்

தேர்தல் பிரசாரங்களுக்கு தமது நிழற்படத்தை பயன்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி உத்தரவு

by Staff Writer 02-07-2020 | 8:09 PM
Colombo (News 1st) தேர்தல் பிரசாரங்களுக்கு தமது நிழற்படத்தை பயன்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சகல வேட்பாளர்களுக்கும் நேற்று (01) உத்தரவிட்டார். பாதுகாப்பு சேவைகள், அரச நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள் , சபைகள் மற்றும் அரசியலமைப்பு ரீதியாக ஸ்தாபிக்கப்பட்ட நிறுவனங்களின் ஊழியர்கள் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடக்கூடாது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கடுமையான அறிவுறுத்தல்களை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதி செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.