இம்ரான் உள்ள சிறைக்கூடத்தில் கையடக்கத் தொலைபேசி 

கஞ்சிப்பானை இம்ரான் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கூடத்திலிருந்து கையடக்கத் தொலைபேசி கைப்பற்றல்

by Staff Writer 02-07-2020 | 3:39 PM
Colombo (News 1st) திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு கைதான கஞ்சிப்பானை இம்ரான் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கூடத்திலிருந்து கையடக்கத் தொலைபேசியொன்றும் 4 சிம் அட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பூசா சிறைச்சாலையில் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கையில் இவை கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கஞ்சிப்பானை இம்ரான் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கூடத்திலிருந்து ஏற்கனவே கையடக்கத் தொலைபேசியொன்று கைப்பற்றப்பட்டது. இது குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசேட விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

ஏனைய செய்திகள்