by Staff Writer 02-07-2020 | 9:37 PM
Colombo (News 1st) உலக வங்கியின் புதிய வருமான நிரல்படுத்தல் அறிக்கை வௌியாகியுள்ளது.
கூடிய வருமானம் பெறும் நாடு என்ற நிலையிலிருந்து, குறைந்த வருமானம் பெறும் நிலை வரை இலங்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு குறைந்த வருமானம் பெறும் ஏனைய நாடுகளாக அல்ஜீரியாவும் சூடானும் குறிப்பிடப்பட்டுள்ளன.
கடந்த வருடத்தில் தனிநபர் வருமானம் 4060 டொலராகக் காணப்பட்டதுடன், அது இந்த வருடத்தில் 4020 டொலர் வரை குறைவடைந்துள்ளதாக உலக வங்கியின் புதிய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.