மிருசுவில் ரயில் நிலையத்திற்கு முன்பாக ஒருவர் மீது தாக்குதல்

மிருசுவில் ரயில் நிலையத்திற்கு முன்பாக ஒருவர் மீது தாக்குதல்

மிருசுவில் ரயில் நிலையத்திற்கு முன்பாக ஒருவர் மீது தாக்குதல்

எழுத்தாளர் Staff Writer

02 Jul, 2020 | 9:43 pm

Colombo (News 1st) யாழ்ப்பாணம் – மிருசுவில் பகுதியில் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ். தென்மராட்சி மிருசுவில் ரயில் நிலையத்திற்கு முன்பாக ஒருவர் மீது நேற்றிரவு 9.30 மணியளவில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதலில் காயமடைந்தவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மிருசுவில் பகுதியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்