12 பேரை தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி

போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் 12 பேரை தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி

by Staff Writer 02-07-2020 | 6:46 PM
Colombo (News 1st) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் 12 பேரை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய நீதவான் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் 12 பேரும் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். போதைப்பொருள் விற்பனைக்கு உதவி புரிந்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பிலான விசாரணைக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.