தேர்தல் பிரசாரங்களுக்கு தமது நிழற்படத்தை பயன்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி உத்தரவு

தேர்தல் பிரசாரங்களுக்கு தமது நிழற்படத்தை பயன்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி உத்தரவு

தேர்தல் பிரசாரங்களுக்கு தமது நிழற்படத்தை பயன்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி உத்தரவு

எழுத்தாளர் Staff Writer

02 Jul, 2020 | 8:09 pm

Colombo (News 1st) தேர்தல் பிரசாரங்களுக்கு தமது நிழற்படத்தை பயன்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சகல வேட்பாளர்களுக்கும் நேற்று (01) உத்தரவிட்டார்.

பாதுகாப்பு சேவைகள், அரச நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள் , சபைகள் மற்றும் அரசியலமைப்பு ரீதியாக ஸ்தாபிக்கப்பட்ட
நிறுவனங்களின் ஊழியர்கள் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடக்கூடாது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கடுமையான அறிவுறுத்தல்களை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதி செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்