சாத்தான்குள தந்தை, மகன் கொலை விவகாரத்தில் 4 பொலிஸ் அதிகாரிகள் கைது

சாத்தான்குள தந்தை, மகன் கொலை விவகாரத்தில் 4 பொலிஸ் அதிகாரிகள் கைது

சாத்தான்குள தந்தை, மகன் கொலை விவகாரத்தில் 4 பொலிஸ் அதிகாரிகள் கைது

எழுத்தாளர் Staff Writer

02 Jul, 2020 | 10:53 am

Colombo (News 1st) இந்தியாவின் தமிழகத்திலுள்ள சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் ஆகியோர் பொலிஸாரினால் தாக்கி கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் உள்ளிட்ட நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சாத்தான்குளத்தில் தமது தொலைபேசி விற்பனை நிலையத்தை அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குப் பின்னர் திறந்துவைத்திருந்ததாகக் கூறி, பொலிஸாரினால் அழைத்துச் செல்லப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட தந்தையும் மகனும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இந்த விவகாரம் சர்வதேச அளவில் எதிர்ப்பலைகளை தோற்றுவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையின் பரிந்துரையின் பேரில் இந்த வழக்கை இந்திய குற்றப் புலனாய்வுத் துறை விசாரித்து வருகின்றது.

சாத்தான்குள பொலிஸ் நிலையத்தில் உள்ள ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டதுடன் இந்திய குற்றப்புலனாய்வு பிரிவு 12 குழுக்களை அமைத்து இதனை விசாரணை செய்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்