ஆளும் கட்சியுடன் பேரம் பேசிக்கொண்டிருப்பதாக கருணா அம்மான் தெரிவிப்பு

ஆளும் கட்சியுடன் பேரம் பேசிக்கொண்டிருப்பதாக கருணா அம்மான் தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

02 Jul, 2020 | 8:21 pm

Colombo (News 1st) தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் அம்பாறையில் அண்மையில் தெரிவித்த கருத்து தொடர்பில் அரசியல் அரங்கில் அதிகளவில் பேசப்பட்டது.

இந்நிலையில், மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடியில் நேற்று (01) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில், தமது கட்சியை வைத்து ஆளும் கட்சியுடன் பேரம் பேசிக்கொண்டிருப்பதாக கருணா அம்மான் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் குறைந்தது ஒரு பிரதிநிதித்துவமாவது தமக்கு வழங்கப்பட வேண்டும் என கோரி வருவதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, பாராளுமன்றத் தேர்தலில் தன்னைப் போட்டியிடுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்ததாக சுயேட்சைக்குழு வேட்பாளரும் கருணா அம்மானின் மனைவியுமான வித்தியாவதி விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்