நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து கொண்டு மஹிந்த தரப்பை பாதுகாத்ததாகக் கூறுகிறார் லக்ஷ்மன் யாப்பா

by Bella Dalima 01-07-2020 | 8:41 PM
Colombo (News 1st) லக்ஷ்மன் யாப்பா இம்முறை மாத்தறை மாவட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றார். இந்நிலையில், ராஜபக்ஸ தரப்பினருக்காக தாம் செய்த அர்ப்பணிப்பு தொடர்பில் ஹக்மன பிரதேசத்தில் நேற்று (30) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்தார்.
2015 ஆம் ஆண்டு தேர்தலில் கட்சியினால் வழங்கப்பட்ட 50 இலட்சம் அல்ல, 300 இலட்சத்திற்கும் அதிகத் தொகையை செலவு செய்து, வௌியில் இருந்து மக்களைக் கொண்டு வந்து, எனது வியாபாரிகளை அழைத்து வந்து மஹிந்த ராஜபக்ஸவை வெற்றி பெறச் செய்வதற்காகவே அதனைச் செய்தேன். ஷிரந்தி அம்மையாரின் கூட்டத்திற்கு, குறிப்பாக மஹிந்த ராஜபக்ஸவின் குடும்பத்தினருக்குத் தெரியும், வரலாற்றில் நான் என்ன செய்தேன் என்பது. மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் நெவில் இடம் கேட்டால், நான் அந்தக் குடும்பத்தைப் பாதுகாப்பதற்காக, அரசாங்கத்திற்குள் இருந்து செய்த வேலைகள், என்ன என்பதனை அவர்கள் சரியாகக் கூறுவர்
என லக்ஷ்மன் யாப்பா குறிப்பிட்டார்.