ஹோமாகமவில் ஆயுதங்களுடன் பெண் ஒருவர் கைது

ஹோமாகமவில் ஆயுதங்களுடன் பெண் ஒருவர் கைது

ஹோமாகமவில் ஆயுதங்களுடன் பெண் ஒருவர் கைது

எழுத்தாளர் Bella Dalima

01 Jul, 2020 | 6:48 pm

Colombo (News 1st) ஹோமாகம – பிட்டிபன வடக்கு பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து ஆயுதங்களுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வீட்டில் இரகசிய அறையொன்றிலிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

7 கைக்குண்டுகள், ஒரு Repeater Shotgun, 4 ரவைகள் உள்ளிட்ட பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பிட்டிபன பகுதியில் ஏற்கனவே ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட கட்டடத்தின் உரிமையாளருடன் தொடர்புகளைப் பேணியவர் என்பது தெரியவந்துள்ளது.

கடந்த 29 ஆம் திகதி ஹோமாகம பிட்டிபன பகுதியில், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் 12 துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இதன்போது, T56 ரக 11 துப்பாக்கிகளும், T81 ரக துப்பாக்கியொன்றும் கைப்பற்றப்பட்டன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்