பெல்வெஹெர கண்காணிப்பு நிலையத்தில் தங்கியுள்ள நால்வருக்கு மலேரியா

பெல்வெஹெர கண்காணிப்பு நிலையத்தில் தங்கியுள்ள நால்வருக்கு மலேரியா

பெல்வெஹெர கண்காணிப்பு நிலையத்தில் தங்கியுள்ள நால்வருக்கு மலேரியா

எழுத்தாளர் Bella Dalima

01 Jul, 2020 | 4:38 pm

Colombo (News 1st) மாத்தளை – பெல்வெஹெர கண்காணிப்பு நிலையத்தில் தங்கியுள்ள நால்வருக்கு மலேரியாக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய மலேரியா ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஆபிரிக்க நாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்களுக்கே மலேரியாக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக பிரிவின் பணிப்பாளர் டொக்டர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து , இன்று நுளம்பு குடம்பிகள் தொடர்பில் ஆராயும் விசேட குழுவொன்றும் சுகாதாரப் பிரிவு அதிகாரிகளும் குறித்த கண்காணிப்பு முகாம் வளாகத்தில் பரிசோதனைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, வௌிநாடுகளிலிருந்து திரும்பி, கண்காணிப்பில் உள்ளோருக்கு மலேரியாக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் பரிசோதிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வருடத்தின் இதுவரையான காலத்திற்குள் நாட்டில் 16 பேருக்கு மலேரியாக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்